தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்

X
சங்கராபுரம் அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனிவேல்.இவரது கூரை வீடு நேற்று மதியம் திடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது. உடன் கிராம மக்கள் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டின் மேற்கூரைகள் எரிந்து சேதமடைந்தது.
Next Story

