ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளிக்கு கபடி ஆடுகளம்
Tiruppur King 24x7 |11 Sep 2024 5:51 AM GMT
வெள்ளக்கோவில் அரசு பள்ளிக்கு கபடி ஆடுகளத்தை அமைத்து தரப்பட்டது
வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் கரூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கபடி ஆடுகளம் அமைத்து தரப்பட்டது. இந்த ஆடுகளத்தை வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் சாமிநாதன், செயலாளர் சிட்டி பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100க்கு 60 அடி நீளமும் அகலமுடன் செம்மண் நிரப்பப்பட்ட இரண்டு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதமாக கபடி ஆடுகளும் அமைத்து தரப்பட்டதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், ரோட்டரி சங்க நிர்வாகியும் சத்தியம் பள்ளி நிர்வாக தலைவருமான சின்னச்சாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story