இல்லிடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் பங்கேற்பு
Maduranthakam King 24x7 |11 Sep 2024 12:01 PM GMT
இல்லிடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இல்லிடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இல்லிடு கிராமத்தை சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் முகாமில் கலந்து கொண்டுணர் இம்முகாமில் அடிப்படை வசதியான வீட்டுமனை பட்டா , குடும்ப அட்டை, விபத்து காப்பீட்டு தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான உரம் விதைகள் போன்ற இடுப்பொருட்கள் என 105 பயனாளிகளுக்குகளுக்கு 31 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து சென்றார்.
Next Story