திருச்செங்கோட்டில் கேதார கௌரி விரதம் துவக்கம்
Tiruchengode King 24x7 |11 Sep 2024 12:03 PM GMT
திருச்செங்கோட்டில் கேதார கௌரி விரதம் துவக்கம்
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 21 நாட்கள் கேதார கௌரி விரதம் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். சிவனின் மிகச்சிறந்த பக்தர்களில் ஒருவராக திகழ்ந்த பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத் தவிர யாரையும் வழிபட மாட்டேன் என கூறியிருந்த நிலையில் தன்னையும் தன்னால் தான் சிவனுக்கு சக்தி என உமையவள் பிருங்கி முனிவருக்கு உணர்த்த வேண்டி சிவனிடம் வரம் கேட்க பூலோ கைலாயமான திருச்செங்கோடு திருமலையில் 21,000 ஆண்டுகள் அன்னஆகாரம் இன்றி 21 மந்திரங்களை ஓதி 21 வித புஷ்பங்களால் என்னை வழிபட்டு வந்தால் நீ விரும்பிய சித்தி கிட்டும் என ஈசன் கட்டளை இட அவ்வாறு உமையவள் விரதம் இருந்ததாகவும்,22 ஆம் நாள் மஹாலயா அமாவாசை தினத்தன்று திருவண்ணாமலையில் ஜோதி ரூபமாக காட்சியளித்த சிவன் சாந்தமடைந்து உமையவளுக்கு இடப்பாகத்தை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததாக ஐதீகம்.அவ்வாறு கருதப்படும் ஆவணி 26 முதல் 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் திருமண தடைகள் நீங்கும் கணவன் மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்படும் குழந்தை பெயர் கட்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது இதன்படி இந்த ஆண்டு ஆவணி மாத 26 ஆம் நாளான இன்று கேதார கௌரி விரதம் முதல் நாளாக தொடங்கியது வரும் ஒன்னு பத்து இருபத்தி நாலு வரை 21 நாட்கள் இந்த விரதம் இருந்தாலோ அந்தப் பூஜையை கண்ணாரக் கண்டாலோ பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம் சிவாச்சாரியார்கள் முழுக்க தன்னை அம்மனாக பாவித்து காப்பு கட்டி.இந்த 21 நாட்களும் பூஜை செய்வார்கள். அதன்படி முதல் நாளான இன்று 21 மலர்கள் 21 மந்திரங்கள் சொல்லி பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு கேதார கௌரி விரதம் இருக்கத் தொடங்கினர்.
Next Story