கரூரில் கூட்டுறவு பட்டய பயிற்சி துணை மையத்தினை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

கரூரில் கூட்டுறவு பட்டய பயிற்சி துணை மையத்தினை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
கரூரில் கூட்டுறவு பட்டய பயிற்சி துணை மையத்தினை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கரூர் மாவட்டத்திற்கான துணைப் பயிற்சி நிலையத்தை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. கரூர் மாவட்டத்திலிருந்து 62 மாணவ -மாணவியர் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு பட்ட பயிற்சி பெற தினசரி சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு கூட்டுறவு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையான கரூர் மாவட்டத்திற்கான தனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் வேண்டும் என்று கோரிக்கையை 28 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வந்தது. தற்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவியர் கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு பட்டய பயிற்சி பெற்று பயனடையும் விதமாக கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டிடத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் துணைப் பயிற்சி நிலையம் கரூர் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் 122 கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்திட பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிய கூட்டுறவு பட்டய பயிற்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆதலால், இத்துணை பயிற்சி நிலையத்தில் நாமக்கல், திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டில் பயிற்சி பெற்று வரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 62 மாணவர்கள் இதில் பயனடைந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 100 மாணவர்கள் கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்ந்து பயனடைய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
Next Story