சிறுவன் உடல் உறுப்பு தானம் மாவட்ட ஆட்சியர் அரசு மரியாதை
Dindigul King 24x7 |11 Sep 2024 1:37 PM GMT
பெரியகோட்டையில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உடல் உறுப்பு தானம் அளித்ததால் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அரசு மரியாதை செலுத்தினார்
திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவியும் ஹரிஷ் (வயது 13), கிஷோர் (வயது 11). ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். இதில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிஷோர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. மூளைச்சாவு ஏற்பட்ட கிசோரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். இதில் பெற்றோர்கள் சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். இதனால் சென்னை மற்றும் மதுரையில் இருந்து மருத்துவ குழுவினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவனுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக கிஷோரின் இதயத்தை எடுக்க முற்பட்ட பொழுது இதயத்தில் வைரஸ் தாக்குதல் இருப்பதாக இதயத்தை எடுக்கவில்லை. சிறுவனின் தோல், அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. மேலும் உடல் தானம் செய்த சிறுவன் கிஷோரின் சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கிஷோருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி மாலை அணிவித்து அரசு மரியாதை செய்தார்.
Next Story