உடுமலையில் ஜி கே வாசன் ராகுல் காந்தி குறித்து பேட்டி

திருமண விழாவில் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜே கே வாசன் வருகை புரிந்தார் அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும் பொழுது. தமிழகத்தில் தற்பொழுது தினமும் பல இடங்களில் கொலை கொள்ளை பாலியல் சம்பவம் போதை பொருள் விற்பனை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இவற்றை அரசு கட்டுபடுத்த வேண்டும் , இந்தியாவில் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் குறித்து வெளிநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது ஏற்க கூடியது அல்ல , விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசும் பொழுது தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பூரண மதுவிலக்கு குறித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளது பூரண மதுவிலக்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கோவை திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய நீர் பாசனமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முறைகேடுளால் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் உள்ளதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில் தற்போது வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்பொழுது மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், உடுமலை ரயில் நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர்க்கு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வேலை நிமித்தமாக தினமும் சென்று வருகின்றனர் எனவே சென்னை பெங்களூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், நிகழ்வில் தாமக மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் , மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, மேற்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஜி ஆர் செந்தில் குமார் , மாவட்ட துணை தலைவர் ஜல்லிப்பட்டி நாராயணசாமி, நகர தலைவர் பாலகிருஷ்ணன், உயர்மட்ட குழு உறுப்பினர் யூ கே பி முத்துகுமார் சாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் பிரசாந்த் குமார், இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் கார்த்திக் கண்ணன் ஆசாரூதீன் மற்றும் வட்டாரத் தலைவர்கள் வாளவாடி ரவி,அருணகிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story