பரமத்தி வேலூர் சங்கர கந்தசாமி கண்டர் அருங்காட்சியகத்தை அன்புமணி திறந்து வைத்தார்.

பரமத்தி வேலூர் சங்கர கந்தசாமி கண்டர் அருங்காட்சியகத்தை அன்புமணி திறந்து வைத்து சிறப்புறையாற்றினார்.
பரமத்திவேலூர், செப்.12- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் தொடக்கப்பள்ளி மற்றும் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பரிமள அரங்கில் நடைபெற்றது . இவ்விழாவிற்கு முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சம்பந்தம் தலைமை வகித்தார். அறநிலையங்களின் தலைவர் டாக்டர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தார். அறநிலைய உறுப்பினர் மஹிந்தர் மணி வரவேற்றார். சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம், முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் ரமேஷ், பொன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கந்தசாமி கண்டார் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்கு சித்தனையுடன் பரமத்தி வேலூர் பகுதி மக்கள் கல்வி அறிவு பெற்று உயரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தனது சொத்துக்களை எல்லாம் கல்விக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் வழங்கி உள்ளனர். கிராமப்பகுதிகளில் சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் படிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தனது சொத்துக்களை எல்லாம் அறக்கட்டளையாக நிறுவி அதன் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.‌ அந்த கல்வி நிறுவனங்களை அறநிலைய நிர்வாகிகள் இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். நாட்டில் அனைத்து சமூகத்தினரும் சமநிலையை அடைய வேண்டுமெனில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும். மேலும் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணைகளை அமைக்க வேண்டும் அப்பொழுதுதான் செழுமையாக இருக்க முடியும். மாணவர்கள் மது போதையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நடத்தி நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறினார். முடிவில் கண்டர் அறநிலைய உறுப்பினர் மாசிலாமணி நன்றி கூறினார்.
Next Story