ஆரணியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்.

ஆரணி, செப்.11. இந்து முன்னணி சார்பில் ஆரணியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்றது.
ஆரணி நகரில் இந்து முன்னணி சார்பாக கடந்த 7 அன்று விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு இடங்களில் பிரமாண்டமான முறையில் விநாயகர் சிலைகள் அமைத்து தொடர்ந்து 5 நாட்கள் பூஜைகள் நடத்தி வந்தனர். விநாயகர் சிலைகள் விசர்ஜன நிகழ்ச்சிக்கா பிற்பகலில் ஆரணி அண்ணா சிலை அருகே ஒரே இடத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் கொண்டு வந்தனர். இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன், வேலூர் மண்டல பொறுப்பாளர் மகேஷ்ஜி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் .பாஜக முன்னாள் நிர்வாகி பி .கோபி, இந்து முன்னணி நகர நிர்வாகிகள் முத்து ,லோகு, பாஸ்கரன் ,கோபி, வினோத், வெங்கடேசன் ,விக்கி ,சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், இந்து முன்னணி மத்திய அரசு வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ரத்தினகுமார், தொழிலதிபர்கள் அஸ்வந்த்பாபு, ஜி. ஏ. கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது . முடிவில் பொறுப்பாளர் கே. கபாலி நன்றி கூறினார். ஊர்வலத்தின் போது சிலம்பாட்டம் ,கேரள செண்டை மேளம் வாத்தியம், நாடக கலைஞர்களின் தெய்வங்கள் உருவங்கள் அமைத்து உடன் சென்றனர். ஊர்வலம் மார்க்கெட் ரோடு , காந்தி ரோடு ,வடக்கு மாடவீதி, பெரிய கடை வீதி , சத்தியமூர்த்தி சாலை ,காஜிவாடை, ராமகிருஷ்ணா பேட்டை ,பையூர் எம்ஜிஆர் நகர் பகுதி வரை ஊர்வலம் சென்றனர் . அங்கு பாறை குளத்தில் விநாயகர் சிலைகளை கிரேன் உதவியுடன் குளத்தில் கரைத்தனர் ஊர்வலத்திற்காக கூடுதல் டிஎஸ்பி சிவ ஸ்ரீ பாண்டியன் , டிஎஸ்பிக்கள் ஆரணி ரவிச்சந்திரன், செய்யார் சின்னராசு, இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, ராஜாங்கம், மகாலட்சுமி, எஸ்.ஐக்கள் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார்கள் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாக நடந்தது. மேலும் நகரில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆங்காங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்துடன் ஒவ்வொரு விழா குழு நிர்வாகிகளும், பொதுமக்களும், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் , பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story