மணலுார்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்

மணலுார்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்
ஊர்வலம்
மணலுார்பேட்டை மற்றும் விளந்தையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேரில் ஆய்வு செய்தார். மணலுார்பேட்டை மற்றும் விளந்தை கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மதியம் விளந்தை காலனி பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. நேராக தென்பெண்ணை ஆற்றிற்கு மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது.அதேபோல் மணலுார்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை 2.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 5:30 மணிக்கு கூவனூர் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. முன்னதாக ஊர்வலம் செல்லும் பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேரில் ஆய்வு செய்தார். உடன் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Next Story