பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

X
மணலுார்பேட்டை அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சங்கராபுரம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முனுசாமி, 35; கடந்த 9ம் தேதி இரவு 10:00 மணி அளவில் ஜம்பைக்கு சென்று கொண்டிருந்தார். ஜம்பை, சம்பத் செங்கல் சூளை அருகே சென்றபோது, எதிரில் அதிவேகமாக வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோர் பைக்கை ஓட்டி வந்த ஜம்பையைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முனுசாமியின் தந்தை கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

