கட்டுரை போட்டி பள்ளி மாணவிக்கு பரிசு

X
மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் வெள்ளி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு டி.ஆர்.ஓ., காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு நாள் குறித்த கட்டுரை போட்டி நடந்தது.இதில் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளி 12 ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் டி.ஆர்.ஓ., சத்யநாராயணன், வெற்றி பெற்ற மாணவி புவனேஸ்வரிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Next Story

