அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி பேட்டி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி பேட்டி
திண்டுக்கல் அருகே 11 வயது சிறுவனின் தோல் மட்டுமே தானமாக வழங்கப்பட்டுள்ளது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி பேட்டி
திண்டுக்கல் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில் இளைய மகன் கிஷோர் வயது 11 இவர் மா.மூ கோவிலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். இவருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்து உள்ளது இந்நிலையில் கிஷோர் காய்ச்சல் அதிகமாக சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கிஷோரின் உடலை உடல் தானம் கொடுக்க வருகை தந்தனர். கிஷோரின் உடலை சென்னை மற்றும் மதுரையிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் உடல் கூறு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் உடல் தான நடவடிக்கைகள் முடிந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே கொண்டு வரப்பட்ட 11 வயது சிறுவனின் உடலுக்கு அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story