மகாகவி பாரதி விழா: இந்தியா வடிவில் மாணவர்கள் அணிவகுப்பு

மகாகவி பாரதி விழா: இந்தியா வடிவில் மாணவர்கள் அணிவகுப்பு
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் இந்தியா வடிவில் அணிவகுந்து நின்று உறுதி மொழி ஏற்றனர்.
நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பாரதியின் நினைவு தின நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில், மாணவர்கள் இந்தியா வடிவில் அணிவகுத்து நின்று பாரதியின் மாஸ்க் அணிந்து, தேச ஒற்றுமைக்கும், தேசப் பாதுகாப்பிற்கும் பாடுபடவும், கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி முன்னாள் மாணவர்கள் ஜெயராஜ், முத்து முருகன், தலைமையாசிரியர் செல்வி, ஆசிரியர்கள் அருள் காந்தராஜ், ஆகாஷ், ஷீபாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story