காங்கேயம் அருகே கோவில் பிரச்சினை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை
Kangeyam King 24x7 |12 Sep 2024 6:04 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரவு 10 மணியளவில் கலைந்துசென்றனர்.
காங்கேயம் அடுத்த காடையூர் அருகே உள்ள பசுவன்மூப்பன்வலசு பகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பசுவன்மூப்பன்வலசு பகுதியில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி கோவில்கள் மாற்று சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளே உள்ளதாகவும் இதனால் ஒவ்வொரு முறையும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், மேலும் இந்த கோவிலானது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் காலம் காலமாக எங்கள் முன்னோர்கள் இங்கு வழிபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். கோவில் இடத்தை மீட்டுத் தரவும் தாங்கள் வழிபாடு செய்ய வேண்டிய 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் மாலை 3 மணி முதல் இரவு வரை எங்கள் சமுதாய பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தோம் ஆனால் வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூடிய விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுமார் இரவு 10 மணிக்கு மேல் வட்டாச்சியர்,காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2 அல்லது 3 தினங்களில் தோட்டத்தின் உரிமையாளரிடம் பேசி கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களை திறந்துவிட சொல்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
Next Story