அஞ்சாகவுண்டம்பட்டி- கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.

அஞ்சாகவுண்டம்பட்டி- கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
அஞ்சாகவுண்டம்பட்டி- கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம். கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, அஞ்சா கவுண்டன்பட்டி கிராமத்தில் ஆர்கே பன்னீர்செல்வம் நிறுவனத்தாரின் கல்குவாரி அமைக்கவும், அதே பகுதியில் பி பிரபாகரன் நிறுவனத்தாரின் கல்குவாரி அமைப்பதற்காக பண்ணப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பு பொறியாளர் ஜெயராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட பண்ணப்பட்டி மற்றும் எருமார்பட்டியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கல்குவாரி அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என கருத்து தெரிவித்தனர். அதேசமயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே, கரூர் மாவட்டத்தில் அதிகப்படியான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. செயல்பட்டு வரும் அது போன்ற கல்குவாரிகளில் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருவதால், இந்த குவாரி அமைக்க அனுமதி தர கூடாது என தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பொதுமக்கள் கூறிய கருத்துக்களை அதிகாரிகள் பதிவு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story