சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தின் போது செய்யவேண்டிய முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு
Thiruporur King 24x7 |12 Sep 2024 8:19 AM GMT
போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தின் போது செய்யவேண்டிய முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய படூர் முதல் நிலை ஊராட்சியில், அலர்ட் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை, ஃபோர்ட் நிறுவனம் இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தின் போது செய்ய வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின் பள்ளிக்கரணை உதவி ஆணையர் சுந்தர்ராஜ், கேளம்பாக்கம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தினேஷ்குமார், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர், ஆகியோர் சிறப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்வது குறித்தும் பொதுமக்களுக்கு சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினர். முன்னதாக விழிப்புணர்வு குறித்த அட்டைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் படூர் ஓஎம்ஆர் சாலை முதல் இந்துஸ்தான் கல்லூரி வரை விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசங்கரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பேச்சில் கல்லூரி பேராசிரியர்கள் தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story