திருப்பூர் மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் சென்னை போலிசார் விசாரணை. முக்கிய ஆவணங்கள் சிக்கின!
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சையாக பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு, மேலும் அங்குள்ள ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தார். இதை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சென்னையில் வைத்து கைது செய்த நிலையில் , நீதிமன்றத்தில் 3 நாள் போலீஸ் காவலுக்கு எடுத்துள்ள நிலையில் , திருப்பூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பரம்பொருள் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை அழைத்து வந்தனர். பரம்பொருள் அறக்கட்டளையில் 4 மணி நேரத்திற்கு மேலாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தொடர்ந்து அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சென்று ஒவ்வொரு கோப்புகளாக ஆய்வு செய்தனர். காவல் துறையினர் மகா விஷ்ணுவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் , நன்கொடை வசூல் , அறக்கட்டளை செயல்பாடு குறித்தெல்லாம் விசாரித்தனர் மேலும் அலுவலகத்தில் இருந்த வங்கி சார்ந்த ஆவணங்கள் , ஹார்டு டிஸ்க் , லேப்டாப் பென் ட்ரைவ் ஆகியவற்றை விசாரணைக்காக பார்சல் செய்து எடுத்து சென்றனர். குறுகிய காலத்தில் வெளிநாடுகளில் கிளைகளை பரப்பியது எப்படி என்றெல்லாம் விசாரிக்க உள்ளனர்.மகா விஷ்ணுவுக்கு உதவியவர்களின் பட்டியலும் பெறப்படுகிறது உதவுபவரக்ளின் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மகா விஷ்ணுவை அழைத்த வந்த நிலையில் இருந்த பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் ,திருப்பூர் மாவட்ட காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
Next Story



