காங்கேயம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகரிப்பு சிசிடிவி காட்சிகள் வைரல்
Kangeyam King 24x7 |12 Sep 2024 5:15 PM GMT
காங்கேயம் ,முத்தூர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரிப்பு - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர்,முத்தூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் மது பாட்டில்கள் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது விற்பனை செய்யப்படுவது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகிவருகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர்களே காவல்துறை கட்டுப்பாட்டு 100 தொலைபேசி எண்ணிற்கு புகாரும் கொடுத்துள்ளார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் நத்தக்காடையூர் மற்றும் முத்தூர் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் அதாவது மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு பூட்டப்படுவது வழக்கம். இரவு பூட்டிய பின்னர் மற்றும் அதிகாலை நேரங்களில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு அதாவது 150 ரூபாய் கொண்ட மதுபாட்டில்கள் 230 ரூபாய் வரை விற்கப்படுவதும் பீர் வகை பாட்டில்கள் 160 ரூபாய்க்கு விற்கப்படுவதை 240 ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகின்றது. மேலும் நத்தக்காடையூரில் செயல்படும் டாஸ்மாக் கடை எண் 3890ல் இன்று அதிகாலை நேரத்தில் ஒருவர் மது பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்குவதும் பிறகு டம்ளர் ஒன்றை எடுத்துக் கொண்டு போவதும் மேலும் இந்த பாரில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டுள்ள வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர்களே காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100 புகாரும் கொடுத்துள்ளார் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்தூரில் உள்ள டாஸ்மாக் கடை எண் 3632 கடையில் இரவு 9.45 மணிக்கு ஒருவர் மது வாங்க சென்று விட்டு கூகுள் பே மூலம் பணம் கொடுக்கிறார். ஆனால் டாஸ்மாக் ஊழியர் அரசு வழங்கிய இயந்திரம் பழுதடைந்து உள்ளதாகவும் பாரில் பணம் பெற்று வரச் சொல்கிறார். பாரில் கூகுள்பே மூலம் பணம் கொடுக்கப்பட்டால் கமிஷன் முறையில் வழங்கப்படுவதாகவும் இதனால் சிறிது நேரம் காலதாமதம் ஏற்படுகிறது. அப்போது மணி இரவு 10 என்பதால் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றது இதன் பின்னர் பாரில் மது வாங்குகிறார் அதனுடைய விலை இரட்டிப்பு ஆகின்றது. அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றது. காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக்காடையூர், ஊதியூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் மது விற்பனை ஜரூராக நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனால் இது போல் ஓரிரு கடைகளில் ஏற்படும் வாக்குவாதங்கள் மற்றும் முன்விரோத செயல்களால் தான் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றது.
Next Story