விருத்தாசலம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
Virudhachalam King 24x7 |12 Sep 2024 6:15 PM GMT
விருத்தாசலம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்று பேசினார்
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம் எஸ் கணேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன். கணேஷ் துணை செயலாளர் நம்பிராஜன் மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன் பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராமு நன்றி கூறினார். கூட்டத்தில் வருகின்ற 15,16,17 ந்தேதி நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் இருந்து பெரும் திரளாக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி வணிக வளாகங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் உள்ளிட்ட இடங்களிலும் கழக கொடியினை ஏற்றிட வேண்டும். கழக இளைஞரணி செயலாளர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி நகரம் முழுவதும் கழக இளைஞரணி உறுப்பினர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்கிற 100 சதவீதத்தை திரும்பி பார்க்கும் வகையில் சாதனை வெற்றியை பெற்று தந்த தமிழக அரசின் வரலாற்று சாதனை படைத்த தளபதி ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கு 200 இடங்களை இலக்காக வைத்து பணியாற்றிட வேண்டும். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு மிக பெரும் அடித்தளமாக அமைந்த தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் மிக சிறப்பாக ஆட்சியும் சாதனை திட்டங்களை கொடுத்து வரும் தளபதியின் தலைமையிலான கழக அரசின் நிதி ஆதாரங்களை வழங்காமல் ஆட்சிக்கு இடையூறு செய்கிற வகையில் ஒன்றிய அரசு மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் செய்து வரும் ஆதாரங்களை வழங்காமல் ஆட்சிக்கு இடையூறு செய்திட முடிக்கிற வகையில் ஒன்றிய அரசு செய்த போதும் மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் செய்து வரும் தளபதி தற்போது அமெரிக்கா போன்று பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்து பல தொழில் புரட்சி செய்து வெற்றிகரமாக நாடு திரும்பும் தளபதி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் செய்திட வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சிகளின் வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை செய்து காட்டி இந்திய நாட்டின் பெருமையை உலகறிய செய்யும் விதமாக சென்னை தலைநகரில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி அதுவும் வெற்றிகரமாக உலக தரமான செயல்களை செய்து உலக அரங்கில் சென்னையை அனைத்து நாட்டின் விளையாட்டு வீரர்களும் பெருமைப்பட திரும்பிப் பார்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை செய்து காட்டுவதும் அதோடு தனது அரசியல் வாழ்வில் தாத்தா கலைஞர் போல் தந்தை தளபதி வழியில் இளைஞர் அணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரும் காலத்தில் கழகத்தின் தலைவர் முதல்வர் அவர்கள் துணை முதலமைச்சராக பொறுப்பை வழங்கியும் ஆட்சியில் திறம்பட தொடர்ந்து நடத்திட மாவட்ட கழகத்தின் வழியில் மாண்புமிகு அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தளபதி குமார், தளபதி, மணிவண்ணன், செந்தில்குமார், பூதாமூர் முத்து, மாணவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், துணை அமைப்பாளர் செல்வமணி, சீனிவாச காந்தி, கவுன்சிலர்கள் தங்க அன்பழகன், வயலூர் கிருஷ்ணமூர்த்தி, அன்சர்அலி, செந்தில், தீபாமாரிமுத்து, வசந்தி, சுந்தரி, உஷா பாலு மற்றும் மாவட்ட நகர கிளை கழக செயலாளர் பிரதிநிதிகள் இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story