தளவாடபொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க அமைச்சர் நடவடிக்கை
Dindigul King 24x7 |12 Sep 2024 7:26 PM GMT
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தளவாடபொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க அமைச்சர் நடவடிக்கை துரைராஜ் நகர் இல்லத்தில் பயனாளிகள் பாராட்டு
திமுக மாநில துணை பொது செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களின் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆத்தூர் தொகுதி மக்கள் வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். அப்போது கட்சிநிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு முறையான செங்கல், சிமென்ட், கம்பி கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்ததோடு சிரமமின்றி பயனாளிகளுக்கு செங்கல், சிமெண்ட், கம்பி உட்பட தளவாட சாமான்கள் கிடைக்க அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சிநிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதுதவிர பயனாளிகள் வீடுகள் கட்டுவதை அடிக்கடி பார்வையிட வேண்டுமென உத்தரவிட்டார். இதற்காக தலைமை செயற்குழு உறுப்பினர், ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் பயனாளிகளுக்கு தளவாட சாமான்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கியதோடு மட்டுமின்றி பயனாளிகளின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு சலுகை விலையில் கட்டிட பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்த திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களுக்கு சமூக ஆர்வளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதவிர பயனாளிகள் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் ஜெயன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நாகராஜன், திண்டுக்கல் மாநகர துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், ஆத்தூர் முருகேசன், திமுக நிர்வாகி அம்பை ரவி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் விவேகானந்தன், செட்டியபட்டி விடுதலை முருகன், பஞ்சம்பட்டி மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், குட்டத்து ஆவரம்பட்டி டென்னி, அய்யம்பாளையம் பேரூராட்சிமன்ற தலைவர் ரேகா அய்யப்பன், அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மணி (எ) நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், ஊராட்சிமன்ற தலைவர்கள் கொத்தபுள்ளி சுந்தரி அன்பரசு, பாறைப்பட்டி பாலாஜி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கதிரயன்குளம் சுமதிகணேசன், வீரக்கல் செல்வி காங்கேயன், திண்டுக்கல் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ரெட்டியார்சத்திரம் ரமேஷ், ஆத்தூர் மேற்கு ஒன்றியம் காங்கேயன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லைசுபாஷ், ஜான்பீட்டர், டாஸ்மாக் வடிவேல், மற்றும் திண்டுக்கல் நகர திமுக நிர்வாகிகள் நந்திநடராஜன், நரசிங்கம், 7வது வார்டு வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story