பல்லடத்தில் முதன் முறையாக மராத்தான் மற்றும் வாக்கத்தான்

பல்லடத்தில் முதன் முறையாக மராத்தான் மற்றும் வாக்கத்தான்
கண் தானம் விழிப்புணர்வு மராத்தான்
பல்லடத்தில் ரோட்டரி கிளப் ரெயின்போ அமைப்பினர் மற்றும் இமைகள் கண்தான அமைப்பினர் சார்பில் கண் தானம் குறித்த சிறப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 20ஆம் தேதி நடக்கவுள்ளது.அதனை முன்னிட்டு மாரத்தான் நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து பொறுப்பாளர்கள் பேசுகையில் இந்த மாரத்தானின் நோக்கம் மண்ணில் புதைக்கின்ற கண்களை மனிதருக்குள் விதையுங்கள் என்ற நோக்கத்தில் இந்த மாரத்தான் நிகழ்ச்சியானது நடைபெற இருப்பதாகவும் ஒன்றரை லட்சம் பேர் கருவிழி பாதிப்பில் இருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 25,000 கண்கள் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் கருவிழி பாதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கும் கண்கள் தானமாக கிடைக்க இந்த முயற்சியை முன்னெடுத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதன் மூலம் கண் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பெருமளவில் பொதுமக்கள் இடையே சென்றடையும் என்ற காரணத்தினால் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story