பி.ஏ.பி வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர்

பி.ஏ.பி வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர்
நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணை வாயிலாக செயல்படுத்தப்படும் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது 2 வது மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் உகாயனூர் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து பிரிந்து அல்லாளபுரம் வழியாக வீரபாண்டி கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும். இந்த வீரபாண்டி கிளை வாய்க்கால் வழியாக சுமார் 1200 ஏக்கருக்கு தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்காலில் இன்னும் இரண்டு ஒரிரு நாளில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிந்து கார்டன் வழியாக செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலை தண்ணீர் செல்லுவதற்காக விவசாயிகள் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி சார்பிலும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிந்து கார்டன் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து சாக்கடை நீர் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பி.ஏ.பி. வாய்க்காலில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இன்னும் இரண்டு ஒரிரு நாளில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த வழியாக வரும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த வாய்க்காலில் விடப்பட்டுள்ள சாக்கடை நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்.சாக்கடை நீரை வாய்க்காலில் விட்டவர்கள் மீது உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Next Story