அரசு மருத்துவமனையில் பாதுகாப்பின்றி கிடக்கும் ஆவணங்கள்
பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் இது குறித்த ஆவணங்கள் உரிய பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ளது மேலும் பிணவறைகளின் ஆவணங்களும் இதுபோன்று பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது இது குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



