பத்தாம் கட்ட அலாய்வு களிமண் பானை கண்டுபிடிப்பு
Sivagangai King 24x7 |13 Sep 2024 4:34 AM GMT
சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியில் ஒரு உடைக்கப்படாத சிவப்பு களிமண் பானை கண்டுபிடிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. 12 குழி தோண்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை 9 குழி தோண்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்ணாடி குவளைகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உடைந்த செப்பு உலோக பொருட்கள் மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட விளையாட்டு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உடைக்கப்படாத சிவப்பு மண் பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது 2 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டது. பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த பானைகள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில், உடைக்கப்படாத சிவப்பு பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
Next Story