சங்ககிரியில் திமுக சேலம் மேற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்...
Sangagiri King 24x7 |13 Sep 2024 6:31 AM GMT
சங்ககிரி: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பேரூராட்சி விரைவில் நகராட்சியாக அறிவிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு....
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சங்ககிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் திமுகவில் ஒவ்வொரு உண்மை தொண்டனும் ஈடுபாடோடு உழைத்ததால் தான் சேலம் மாவட்டத்தில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதே போல் தற்போது திமுக தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளவாறு அனைவரும் இணைந்து கட்சி பணியாற்றி வருகின்ற 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும் எனவும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனாவால் நிதி நெருக்கடிக்குள்ளானது. அதனையடுத்தும் அரசு நிதி நெருக்கடியுள்ளதால் அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் மூலம் பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து நிலையிலான பணிகளுக்கும் முதல்வரின் ஆலோசனைகளை பெற்று நிரப்பபடும் என்றார். திமுக சார்பில் வருகின்ற 17ம் தேதி நடைபெற உள்ள பவளவிழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இது குறித்து சுவர் விளம்பரங்களை அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும் என்றார். திமுக தலைமையகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுஉறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி அது குறித்த தகவல்களை உடனுக்குடன் தலைமை அறிவித்துள்ள தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் என்றார். சங்ககிரி பேரூராட்சி விரைவில் நகராட்சி அறிவிக்கப்படும் மேலும் சங்ககிரியில் உழவர் சந்தை அமைக்கப்படும் பேசினார். அப்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, சங்ககிரி நகரச் செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கே.எம்.ராஜேஷ் ,சீனிவாசபெருமாள், மிதுன்சக்கரவர்த்தி அர்த்தனாரீஸ்வரன் நல்லதம்பி பச்சமுத்து பாலசுப்ரமணியன்மாவட்ட மகளிரணி நிர்வாகி நிர்மலா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சேலம் மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி சட்டமன்ற பேரவை தொகுதிக்குள்பட்ட திமுக பொது உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story