வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போனை பறிக்க முயற்சி
Dindigul King 24x7 |13 Sep 2024 11:13 AM GMT
வேடசந்தூர் ஆத்துமேட்டில் மது போதையில் இருந்த வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போனை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் - செல்போனை தர மறுத்ததால் தாக்கி விட்டு தப்பி ஓட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இதில் தனியார் நூற்பாலையில் பணி புரியும் ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மதுபோதையில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஓனில் முர்மு என்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ஒனில் முர்மு அவர்களிடம் செல்போனை அவர்களிடம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஒனில் முர்முலை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த ஒனில் முர்மு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த ஒனில் முர்முவை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வடமாநில இளைஞர்கள் இடம் செல்போனை பறிக்க முயற்சித்த சிறுவர்களை அங்கு உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பணிகள் நிழற்குடை மது போதை ஆசாமிகளின் கூடாரமாக பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எனவே போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story