ராமகவுண்டன் புதூரில், தனியார் பேருந்தை வேகமாக இயக்கி திடீரென பிரேக் இட்டதால் கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து.

ராமகவுண்டன் புதூரில், தனியார் பேருந்தை வேகமாக இயக்கி திடீரென பிரேக் இட்டதால் கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து.
ராமகவுண்டன் புதூரில், தனியார் பேருந்தை வேகமாக இயக்கி திடீரென பிரேக் இட்டதால் கல்லூரி மாணவன் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா,பெரிய வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் லோகேஷ் வயது 20. இவரது நண்பர், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பரவக்கோட்டை, மேல தெருவை சேர்ந்தவர் இந்திராமோகன் மகன் ஹரிதாஸ் வயது 20. இவர்கள் இருவரும் கரூர் கோவை சாலையில் உள்ள காரடையாம் பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி காலை 8.30 மணி அளவில்,கரூர் - கோவை சாலையில் செல்லும் தனியார் பேருந்தில் கல்லூரிக்கு பயணித்துள்ளனர். இவர்கள் சென்ற பேருந்து ராமகவுண்டன்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் டெக்ஸ் நிறுவனம் அருகே, ஒரு திருப்பத்தில் பேருந்தை வேகமாக செலுத்தி, திடீரென பிரேக் இட்டதால், பேருந்துக்குள் பயணித்த ஹரிதாஸ் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஹரிதாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக பேருந்து நிறுத்தி, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஹரிதாசை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லோகேஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தனியார் பேருந்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன் வயது 32 என்ற ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story