குளித்தலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

குளித்தலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பேட்டி
கரூர் மாவட்டம் குளித்தலையில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் பாஜகவை வலுப்பெற செய்ய புதிய உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் பொருட்டு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் ஒரு கோடி பேரினை பாஜகவில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவிலே அதிக கடன்கள் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளதாகவும், தற்போதைய திமுக அரசு ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன எனவும், அவர்கள் புதிய கோரிக்கைகளை வைக்கவில்லை ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி போராட்டங்களை நடத்தி வருவதாகவும், வரலாற்றிலேயே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், அந்த சம்பளங்கள் வழங்கப்பட வேண்டிய பணத்தினை திமுக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்சி காலத்திலேயே ஊழல் செய்துள்ளதாகவும், அவர்கள் மாணவர்கள்,அரசு ஊழியர்கள், பொதுமக்கள் யாருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும், பல்கலைக்கழக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே இதற்கு காரணம் எனவும், தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை இழுத்தடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் பாஜக கூட்டணி குறித்து கேட்டபோது தேசிய தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் எனவும் தற்போது உறுப்பினர் சேர்க்கை மட்டுமே முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதற்காக கட்சி பணிகளைப் போல இரண்டு மாத காலமாக ஒதுக்கி வைத்துவிட்டு உறுப்பினர் சேர்க்கையில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story