சங்ககிரி மலையில் நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடக்கம்....

சங்ககிரி மலையில் நாளை  முதல் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடக்கம்....
சங்ககிரி:மலையில் நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு தொடக்கம்...
புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்குவதையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் குழுவின் சார்பில் 34வது ஆண்டாக செப்.14ம் தேதி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தர்கள் குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசி சனிக்கிழமைய அன்று மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்தாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குவதையொட்டி பக்தர்கள் குழுவின் 34வது ஆண்டாக செப்.14ம் தேதி சனிக்கிழமை காலை சுப்ரபாதத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டு சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் பின்னர் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட உள்ளது .அன்றைய தினம் மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் காலை, நண்பகல் இரு வேளைகளிலும் அன்னதானம் வழங்க பக்தர்கள் குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Next Story