நால்ரோட்டில் இரு தரப்பினர் இடையே மோதல்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த நாள் ரோட்டில் இரு தரப்பினர் இடையே இரு சக்கர வாகனம் வாங்கியதில் வாக்குவாதம்
காங்கேயம் நால்ரோடு அடுத்த பரஞ்சேர்வழி நத்தக்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவபவர் திருநாவுக்கரசு கூலித் தொழிலாளி இவரது தங்கை மகன் காங்கேயத்தில் தனியார் நிறுவனத்தில் இருசக்கர வாகனத்திற்கு லோன் வாங்கியுள்ளார். இந்த தொகையை 8 மாதங்களாக கட்டாமல் தவணை கூறியுள்ளார். இதை வசூல் செய்வதற்கு நேற்று மதியம் 3 மணி அளவில் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தேடி வந்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதில் இரண்டு பிரிவினரும் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புகார் தெரிவித்து உள்ளனர். பின்னர் காங்கேயம் காவல் துறையினர் இருதரப்பினரடையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story