விருத்தாசலத்தில் பழைய இரும்பு கடை தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு
Virudhachalam King 24x7 |13 Sep 2024 5:17 PM GMT
சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் ஞானதுரை மகன் விமல். இவர் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இங்கு பழைய இரும்புகள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், வேஸ்ட் பாரல்கள் மற்றும் ஆயில் கேன்கள் என பழைய பொருட்களை வாங்கி தனது குடோனில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து மள மள வென எரிய தொடங்கியது. இதுகுறித்து விமல் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததில் அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஆயில் பேரல்கள் பிவிசி பிளாஸ்டிக் பைப்புகள் தீப்பிடித்து இருந்ததால் அப்பகுதி முழுக்க ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது. இந்தப் புகை மூட்டத்தின் காரணமாக அப்பகுதி அப்பகுதி மக்களிடையே மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவும் சூழ்நிலையில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவிய காரணம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story