விருத்தாசலம் அருகே அரசு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
Virudhachalam King 24x7 |13 Sep 2024 5:20 PM GMT
போலீசார் பங்கேற்பு
விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவல்லி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது குழந்தைகள் திருமணம், போக்சோ சட்டம், போதைப்பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் ஒருவர் பாதிக்கப்படும்போது ஆன்லைன் மூலமாகவும், காவல் நிலையம் நேரடியாக சென்றும் புகார் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் நல உதவி மையம் எவ்வாறு செயல்படுகிறது. அவர்களுக்கு எப்படி புகார்கள் தெரிவிப்பது, யாரிடம் புகார் தெரிவிப்பது, எவ்வாறு புகார் தெரிவிப்பது, குறித்து விரிவாக விளக்கி கூறினார். மேலும் சைல்டு ஹெல்ப் லைன் உதவிக்கு 1098 என்ற நெம்பரை அனுக வேண்டும். காவலன் எஸ்ஒஎஸ் ஹெல்ப்லைன் ஆப் எப்படி பயன்படுத்துவது, பள்ளியை விட்டு செல்லும்போதும் பள்ளிக்கு வரும்போது பெண் பிள்ளைகள் தனியாக செல்லக்கூடாது. தோழிகளுடன் சேர்ந்துதான் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கி பேசினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் லதா நன்றி கூறினார்.
Next Story