தேவூர் பேரூராட்சி பகுதிகளில் புதிய கான்கீரிட் சாலைகள் அமைக்கு பணிகள் தொடக்கம்....

தேவூர் பேரூராட்சி பகுதிகளில் புதிய கான்கீரிட் சாலைகள் அமைக்கு பணிகள் தொடக்கம்....
சங்ககிரி:தேவூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய கான்கீரிட் சாலைகள் அமைக்கு பணிகள் தொடக்கம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்க்ரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட எடப்பாடி முதல் குமாரபாளையம் செல்லும் சாலையில் உள்ள மயிலம்பட்டியிலிருந்து குலாலர் தெரு, கொத்துக்காரர் சுப்ராயர் தெரு மற்றும் பல்வேறு தெருக்களில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சித்தலைவர் தங்கவேல் பூமி பூஜை செய்து அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். இதில். தேவூர் நகர செயலாளர் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், பேரூராட்சி 5வது வார்டு உறுப்பினர் வள்ளிநாயகிதங்கவேலன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் தங்கவேலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story