உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா துவக்கம்
Udumalaipettai King 24x7 |14 Sep 2024 3:06 AM GMT
நான்கு நாள் நடைபெறும் என அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் 4 நாட்கள் நடைப்பெறும் பவித்ரோத்ஸவ விழா நேற்று தொடங்கியது.விழாவின் முதல் நிகழ்வாக புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், திருமஞ்சனம்,அதிவாச ஹோமம், வேத திவ்ய பிரபந்த தொடக்கம்,சதுஸ்தான அர்ச்சனம் ,ஹோமம் ,சாற்று முறை கோஷ்டி உள்ளிட்டவையும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது மேலும் ரேணுகா தேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழா 16 ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story