வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை

வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை
பூஜை
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக 63 யாக குண்டங்கள் உருவாக்கப்பட்டு, எட்டு கால வேள்வி பூஜைகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை 8:30 மணிக்கு நான்காம் கால யாக வேல்விகள், கலச பூஜைகள், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாக வேள்வி நடந்தது.சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க நடைபெற்று வரும் யாகசாலை பூஜையில், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஜூடியா தியாகராஜன் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு தினசரி மூன்று வேலை உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இரவு ஜீவ சீனிவாசன் தலைமையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Next Story