இராமநாதபுரம் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |14 Sep 2024 11:12 AM GMT
ரோட்டரி கிளப் ஆஃப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது
ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆஃப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு சார்பில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இலவச இதயம் காப்போம் மருத்துவ முகாம் ராமநாதபுரம் கேணிக்கரை வேலு மாணிக்கம் டைனி டாட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு, துணை ஆளுநர் டாக்டர் ரம்யா தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் ஈஜிசி பரிசோதனை, எக்கோ பரிசோதனை, பிஎம்ஐ ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 175 நபர்கள் இலவச பரிசோதனையில் பங்கேற்றனர். முகாம் குறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு கூறுகையில், ரோட்டரி குளோபல் கிரான்ட் திட்டத்தின் கீழ் விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் சார்பில் முன்னாள் ஆளுநர் முத்து அவர்களின் ரூ45 லட்சம் பங்களிப்புடன் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மூலம் பரிசோதனை வாகனம் பெறப்பட்டு இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார். மேலும் முகாம் ஏற்பாடுகளை சங்க உறுப்பினர்கள் சுகுமார், டாக்டர் ராஜீவ், செயலாளர் அருண் குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story