கரூரில்,திமுக அரசின் திராவிட மாடல் கொள்கைகளை எடுத்துரைத்து கட்சியினரிடையே எழுச்சி ஏற்படுத்திய எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

கரூரில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கைகளை எடுத்துரைத்து கட்சியினரிடையே எழுச்சி ஏற்படுத்திய எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூரில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கைகளை எடுத்துரைத்து கட்சியினரிடையே எழுச்சி ஏற்படுத்திய எம்எல்ஏ சிவகாமசுந்தரி. தமிழகத்தில் திமுக கட்சி துவங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, கட்சியின் பவள விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் மாவட்ட,ஒன்றிய, பேரூர்,ஊராட்சி அளவிலான பொது உறுப்பினர்கள் கூட்டம் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டம், கடவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் கடவூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ் தலைமையில் சிந்தாமணிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நந்தினி செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கஸ்தூரி, ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் தமிழக மக்களுக்காக செய்த பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்து கூறி கட்சியினர் இடையே எழுச்சி உரையாற்றினார். மேலும், கட்சியின் பவள விழாவை கட்சியினர் தங்கள் சொந்த விழாவை கொண்டாடுவது போல சிறப்பாக செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Next Story