தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு
Tiruchengode King 24x7 |14 Sep 2024 12:29 PM GMT
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரிய மணலி ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்டக் திமுக கழக செயலாளர், நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ் எம் மதுரா செந்தில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 26 மாணவர்களுக்கும், 48 மாணவிகளுக்கும் மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் வரவேற்றார். தொடர்ந்து மதுரா செந்தில் பேசுகையில், தமிழக அரசு வழங்கும் இந்த விலையில்லா மிதிவண்டி - கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்திலும் எளிதில் வருவதற்காகவும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது எனவும், மிதிவண்டியில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பொறுமையாகவும் ,பாதுகாப்பாகவும் வந்து செல்ல வேண்டும் என்றும், அவரவர் தனது இருசக்கர வாகனங்களை செவ்வன பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். நிகழ்வில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் , அட்மா சேர்மன் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாசலம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் துணைத்தலைவர் குழந்தைவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், கழக நிர்வாகிகள் வேலுமணி, ராஜ்குமார்,மணிகண்டன் தாமரைச்செல்வன் ,சாந்தகுமார், மாதேஸ்வரன், அருள் ,முருகானந்தம் ,ராஜசேகர்,செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story