சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு தொடக்கம்....

சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத  வழிபாடு தொடக்கம்....
சங்ககிரி: சென்னகேசவப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு தொடக்கம்... ‌
சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோவிலில்புரட்டாசி மாத பிறப்பினையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு புரட்டாசி மாத தொடக்கத்தினையொட்டி அதிகாலையிலேயே சுப்ரபாரத சேவையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. அதனையடுத்து சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளஇட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது . சிறப்பு பூஜைகளையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இப்பூஜைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து மலை ஏறிச்சென்று சுவாமிகளை வழிப்பட்டு சென்றனர். சங்ககிரி அருள்மிகு சென்னகேவப்பெருமாள் பக்தர்கள் குழுவின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத தொடக்கத்தின் முதல் சனிக்கிழமை மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குவதையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.14ம் தேதி முதல் பக்தர்கள் விரதமிருந்து சென்னகேசவப்பெருமாளை வழிபடுவதற்காக செப்டம்பர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை காலையிலிருந்து மலையடிவாரத்தில் இருந்து சுவாமிக்கு தேவையான அபிஷேக, ஆராதனைப்பொருட்கள் மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள், எரிவாயு உருளைகளை தலைமை சுமையாக எடுத்துச் சென்றனர். செப்.13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் மலைக்கு சென்றனர். செப்டம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர். மலைக்கு சென்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் 34வது ஆண்டாக காலை, மதியம் அன்னதானமும், லட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story