திருக்கோவிலூர் வீராட்டனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா
Thirukoilure King 24x7 |15 Sep 2024 4:21 AM GMT
விழா
24 ஆண்டுகளுக்கு பின் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றின் கரையோரம் அமைந்துள்ள இரண்டாம் வீரட்டானம் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சிவானந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக திகழ்ந்து வருகிறது. விநாயகருக்கு அவ்வையார் அகவல் பாடிதாக கூறப்படும் , ஸ்தலமாகவும், தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் பைரவர் ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்கி வரும் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி யாகசால பூஜைகள் நடத்தப்பட்டு, மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், மூலவர் சன்னதி, அம்மன் சன்னதிகளுக்கும், கொடி மரத்திற்கும் எண் மருந்து சாற்றி புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மந்திரங்களை முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story