தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்தும் ஒற்றை யானை

தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்தும் ஒற்றை யானை
தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்தும் ஒற்றை யானை
தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்தும் ஒற்றை யானை ஈரோடு மாவட்டம்,சத்தி அடுத்த தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்தும் ஒற்றை யானை பீதியில் வாகன ஓட்டிகள். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி , மான், சிறுத்தை, கரடி யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனச் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தாளவாடி - கும்டாபுரம் ரோட்டில் யானை நாடமாட்டம் இருந்தது. வனப்பகுதியையொட்டி ரோட்டோரமாக நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் வழக்கம் போல் எதிர் திசையில் ஓரமாக சென்றனர். இதை கண்ட யானை வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் வரிசையாக நின்றன. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் செல்போன்களில் விடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த இடத்தில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாடி வருவதால் இருசக்கர பவாகன ஒட்டிகள் பீதியடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் செ செல்வோர் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Next Story