கல்லூரியில் சிவில் துறையின் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம்
Maduranthakam King 24x7 |15 Sep 2024 8:50 AM GMT
கல்லூரியில் சிவில் துறையின் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம்
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில் துறையின் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.. இதனை கல்லூரியின் தாளாளர் சக்தி கோ ப செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்..கல்லூரி முதல்வர் முனைவர் ராஜா,டீன் முனைவர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் முனைவர் நீள் முடிவோன் என் எல் சி நிறுவனத்தின் செயற்பொறியாளர் அறிவுமணி L&T நிறுவனத்தின் பொறியாளர் சுதாகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தின் முதுநிலை பொறியாளர் ஆண்டனி செல்வராஜ் ஆகிய சிவில் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு சிவில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாடினர்... இக்கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்..மாலையில் நடந்த விழாவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் கலந்து கொண்டு பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.. துறை தலைவர் முனைவர் சௌமியா,தேவி வரவேற்புரை நிகழ்த்தினார்..பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.. இறுதியில் மாணவச் செயலாளர் சக்திவேல் நன்றியுரை கூறினார்..
Next Story