திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு துவக்கம்
Tiruchengode King 24x7 |15 Sep 2024 11:00 AM GMT
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு துவக்கம்
தமிழகத்தின் நீர் நிலைகளை பாதுகாக்க நீர்நிலை கரைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தமிழகமெங்கும் செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சியில் மலையடி குட்டை யில் கரையோரங்களில் 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது . நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பனை விதைகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்* நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மாநில திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்நடேசன் ,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு நகராட்சி பொறியாளர் சரவணன் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் நகர்மன்ற உறுப்பினர்கள் திவ்யாவெங்கடேஸ்வரன், செல்லம்மாள்தேவராசன்,தாமரைச் செல்வி மணிகண்டன் சுரேஷ், முருகேசன், ராஜா,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story