வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு கூட்டம். இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு கூட்டம். இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு கூட்டம். இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், மகாகவி மாற்றுத்திறனாளிகள் சமூக நல அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில் கடவூர் கிழக்கு ஒன்றிய மகாகவி ஊராட்சி மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு கூட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் தமிழரசி, நிர்வாக செயலாளர் செல்வி, மாவட்ட இணை தலைவர் காளியம்மாள், நிர்வாக மேலாளர் தமிழ்ச்செல்வி, கொசூர், மத்தகிரி தொண்டமாங்கினம், வாழ்வார்மங்கலம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அ.சு.தங்க தபதீஸ் அவர்களின் சிறப்பு திட்டத்தின் கீழ், 50-மகாகவி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டிற்கு ரூ.25.000 மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கவும், ஆண்டிற்கு இரண்டு மகாகவி உறுப்பினர்களுக்கு ரூ.15.000- இரண்டு உறுப்பினர்களுக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story