சீனப் பெண்ணை கரம் பிடித்த தேனியை பூர்விகமாக கொண்ட மாப்பிள்ளை
Periyakulam King 24x7 |15 Sep 2024 2:00 PM GMT
திருமணம்
தேனியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் வேஷ்டி சட்டை அணிந்து வலம் வந்த பெண்ணின் தந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட உறவினர்கள் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமுதன் மற்றும் சரவணகுமாரி தம்பதியினர் இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறி வசித்து வந்தனர் இவர்களது மகன் தருண்ராஜ் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சீனாவைச் சேர்ந்த ஸ்னோ ஜூ என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் அமெரிக்காவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது பின் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து மாப்பிள்ளையின் பூர்விக கிராமமான தேனி அருகே அமச்சியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களை திருமணம் நடைபெற்றது தமிழக பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது இந்த திருமண நிகழ்வில் பெண்ணின் தந்தை தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டார் மேலும் அவர்களுடன் மாப்பிள்ளையின் உறவினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story