ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
Komarapalayam King 24x7 |15 Sep 2024 2:49 PM GMT
குமாரபாளையத்தில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி துவங்கியது. இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு வாய்க்கால் கரை பகுதியில் வல்வில்ஓரி நண்பர்கள் சார்பில் விஸ்வநாதன் தலைமையில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். விடியல் ஆரம்பம் சார்பில் பிரகாஷ் தலைமையிலும், தளிர்விடும் பாரதம் சார்பில் சீனிவாசன் தலைமையிலும் தலா 5 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகன்யா, பி.டி.ஒ. கிரிஜா, தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா துவக்கி வைத்தார்கள். மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, தன்னார்வலர்கள் சித்ரா, ஜமுனா, ராணி, தீனா, ஜே.கே.நடராஜா கலை அறிவியல் கல்லூரி , ஐன்ஸ்டீன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story