காங்கேயம் அருகே கம்பளியம்பட்டியில் கோவில் கும்பாபிஷேக விழா
Kangeyam King 24x7 |16 Sep 2024 4:19 AM GMT
கம்பளியம்பட்டியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சப்தகன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஸ்ரீ முனியப்ப சுவாமி திருக்கோயில்கள் மகா கும்பாபிஷேக விழா
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த கம்பளியம் பட்டியில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ முனியப்ப சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மகா கும்பாபிஷேக விழா பூஜைகள் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீ தேவதா அனுக்ஞை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி குபேர ஹோமம், ஸ்ரீ அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹீதி, தீபாரனை நடைபெற்றது.பின்னர் மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் விசேஷ த்ரவ்ய ஹோமங்கள் உடன் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை உடன் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம் மகா தீபாரதனையுடன் நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீ சப்த கன்னிமார் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில், ஸ்ரீ முனியப்ப சுவாமி திருக்கோயில் கோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை இலக்குமநாயக்கன்பட்டி செந்தில்நாத சிவாச்சாரியார் மற்றும் செந்தில்நாதன் ஸ்தபதி ஆகியோர் பூஜைகள் செய்து நடத்தி வைத்தனர். திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு காசி, குற்றாலம், ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி, திருச்செந்தூர், அமராவதி, மடவிளாகம் ஆகிய பகுதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத் திருவிழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக திருவிழாவில் முத்தூர் கந்த சஷ்டி கலைக் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் 100க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டனர்.
Next Story