பணம் பறித்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியை இன்று கரூரில் கைது செய்தனர் .

பணம் பறித்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியை இன்று கரூரில் கைது செய்தனர் .
பணம் பறித்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியை இன்று கரூரில் கைது செய்தனர் .
பணம் பறித்த கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியை இன்று கரூரில் கைது செய்தனர் . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் மகேஷ் அரவிந்த் வயது 29 இவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் பெண் கிடைக்காத காரணத்தால் இவரது உறவினர்கள் தீவிரமாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பே ஆப் என்ற இணையதள செயலி மூலம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா வயது 30 என்பவர் மகேஷ் அரவிந்துக்கு இவர்கள் இருவரும் பழகி வந்த நிலையில் தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது இதனால் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஷ் அரவிந்தும் சத்யாவும் பழனி அருகே ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். மகேஷ் அரவிந்தின் வீட்டார் சத்யா என்ற பெண்ணுக்கு திருமணமானதை தொடர்ந்து நகைகளை வாங்கி அழகு பார்த்தனர்.மேலும் சத்யா நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மகேஷ் அரவிந்த் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யா மற்றும் மகேஷ் அரவிந்த் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்யாவிடம் நைசாக பேசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த மகேஷ் அரவிந்த் புகார் கொடுத்தார். இந்த விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள விவரமும், கரூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ள விபரமும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் என்பவரையும் ஏமாற்றி பணம் பெற்றுள்ள விபரமும், 2012 இல் ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டு அவருக்கும் சத்யாவிற்கும் ஒரு பெண் குழந்தை இருக்கின்ற விபரமும் தெரியவந்தது. மேலும் சத்யாவின் திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வி மற்றும் சத்யா ஆகியோரை தாராபுரம் அனைத்தும் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்யாண ராணியான சத்யாவின் இந்த திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாராபுரம் பகுதியில் பலரும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து சத்யாவை பிடிக்க தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையில் 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஈரோடு மாவட்டம் , பாண்டிச்சேரி மற்றும் கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழ்ச்செல்வி மற்றும் சத்யா இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். செல்போன் சிக்னலை வைத்து தீவிரமாக சத்யா மற்றும் தமிழ்ச்செல்வியை தேடிய அனைத்து மகளிர் போலீசார் தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னல் பாண்டிச்சேரியில் இருப்பதை அறிந்த அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .அப்போது சத்யாவின் தோழி வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதை எடுத்து சத்யாவை போலீசார் கைது செய்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சத்யா மீது கொலை முயற்சி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யா தரப்பினர் முன் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 70 நாட்கள் ஆகியும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் சத்யா ஜாமீனில் விடுதலை பெற்றார். இந்நிலையில் பல மாதங்களாகியும் கல்யாண ராணி சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் முன் ஜாமின் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனு தள்ளுபடி ஆன நிலையில் இருந்து வந்தது. இதனை அறியாத தமிழ்செல்வி போலீசார் தேடி வந்த நிலையில் தமிழ்ச்செல்வியின் மொபைல் எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் கரூர் மாவட்ட பகுதியில் உள்ள காந்திகிராமம் பகுதியில் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்செல்வியை கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கரூர் காந்திகிராமம் பல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் தமிழ்ச்செல்வி வயது 32 என்பதும் தெரிய வந்தது. இவரை உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூரில் உள்ள நல்லூர் சிறையில் அடைத்தனர்.
Next Story