உடுமலையில் அற்புத அன்னை ஆலயம் சார்பில் தேர்பவனி ஊர்வலம்
Udumalaipettai King 24x7 |16 Sep 2024 6:08 AM GMT
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் காந்தி சதுக்கம் பகுதியில் அற்புத அன்னை ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதைத் தொடர்ந்து நாள்தோறும் மாலை 5.30 மணிக்கு செப மாலை, நவநாள், திருப்பலி, சிறப்பு தியான மறையுரை, நற்கருணை ஆராதனை வேண்டுதல் தேர் நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நிகழ்வாக இன்று காலை 8.30 மணிக்கு பங்குப்பெருவிழா திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக இரவு 8 மணிக்கு தேர் பவனி வருதல் நிகழ்ச்சி தொடங்கியது. அற்புத அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி பள்ளிவாசல் வீதி, தலை கொண்ட அம்மன் வீதி,தங்கம்மாள் ஓடை சாலை, பொள்ளாச்சி-உடுமலை சாலை, தளி சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.அப்போது பேண்ட் வாத்தியம் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேருக்கு முன்பு சிலுவை மற்றும் கைகளில் விளக்கு,மலர்கள் ஏந்தியும்,பாடல்களை பாடியும் ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்வை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story